Tuesday, July 1, 2008
Wednesday, June 25, 2008
What is a Sanitary Landfill?
• Full or partial hydrogeological isolation: if a site cannot be located on land which naturally contains leachate security, additional lining materials should be brought to the site to reduce leakage from the base of the site (leachate) and help reduce contamination of groundwater and surrounding soil. If a liner - soil or synthetic - is provided without a system of leachate collection, all leachate will eventually reach the surrounding environment. Leachate collection and treatment must be stressed as a basic requirement.• Formal engineering preparations: designs should be developed from local geological and hydrogeological investigations. A waste disposal plan and a final restoration plan should also be developed.• Permanent control: trained staff should be based at the landfill to supervise site preparation and construction, the depositing of waste and the regular operation and maintenance.• Planned waste emplacement and covering: waste should be spread in layers and compacted. A small working area which is covered daily helps make the waste less accessible to pests and vermin.
The 100 top Web apps for 2008
இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?
2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.
3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.
4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.
5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.
6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.
7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.
8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)
9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.
10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.
11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.
13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.
14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ
என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.
15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.
16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.
17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.
18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) எடுப்பார்கள்.
19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.
20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.
21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.
22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.
24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்
25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.
இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில்
சந்தேகமே இல்லை.
THANK YOU FOR: TEVAGANTHAN(Wattala,COLOMBO,Srilanka)
உறைந்த நினைவுகள்
பிரிவென்று வரும்போது பெருந்தணலாய்ச்சுடுகின்றாய்
கூடி இருக்கையிலே குளிர்நிலவாய்த்தானிருந்தாய்
பக்கம் இல்லாது பகலவனை மிஞ்சுகின்றாய்
கோடைகாலங்கள் இன்னல் பல தருகையிலே
வசந்தமாய் உன் நினைவு வந்து வந்து போகின்றது
காரிருள் என் மீது கவிழ்ந்து கிடக்கையிலே
விளக்காய் வெளிச்சம் தந்து வேறெங்கோ நீ
மலரோடு மரங்கள் அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில் அது விறகாகிப் போயிருக்கும்
உன் நினைவு எப்போதும் எனக்குள்ளே உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி என் சுவாசம் நிறைந்திருக்கும்.
யாரோ
Tuesday, June 24, 2008
வழமையான செய்திகள்
பதுங்கிக்கொண்டபோது - வெறும்
மண்டை ஓடுகளே இங்கே விதைக்கப்பட்டன
பூவும் கொடியுமாய்ப் பூத்துப்பொலிந்த - எங்கள்
கிராமத்து மண்ணிலெல்லாம் - இன்று
எருக்கலை மட்டும் பூத்திருக்கு!
பச்சை மரங்கள்
காற்றசைவில் படபடக்ககூட
அச்சப்பட்டு வாழ்கின்றது எங்கள் அயலட்டம்..
இருண்டுவிட்ட தெருவோரத்தில்
இரவிரவாய்த் 'தேடுதல்'நடக்கும்
இங்கொன்று அங்கொன்றாய்
எம்மவர் காணாமல் போவர்...
தேசத்தின் பிறிதொரு மூலையில்
அடையாளம் காணப்படாதவர்களாக
புலிச் சின்னம் பொறித்து - அவர்கள்
புதைக்கப்படுவார்கள்
தேசம் 'வழமைக்குத் திரும்பியதாக'
தெற்கில் செய்தி வரும் - ஆம்
இவைகள் தான் வடக்கிலும் கிழக்கிலும்
வழமையான செய்திகள்
தனேஸ்-
நன்றி: மாணவர் முரசு
IP Address" என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
ஐபி முகவரிகள் என்பது இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கணினிகளைஅடையாளம் கண்டு தொடர்புகொள்ள ஒவ்வொரு கணினிக்கும் தரப்படும்எண்களாலான முகவரி" எடு. "195.194.234.345"IP எனபது INTERNET PROTOCOL என்பதின் சுருக்கமாகும்.இதுபற்றி எனது முதல் கணினிக்கட்டுரையிலே மேலோட்டமாக தெரிவித்திருக்கிறேன்இணையம் என்னும் வலையமைப்பில் மிக அதிக என்னிக்கையிலான கணினிகள்இணைக்கப்பட்டுள்ளன, இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள கணினிகள் அனைத்தும்தங்களுக்கென ஒரு IP Addressஐக் கொண்டுள்ளன, இத்தகைய IP Addressஐப்பயன்படுத்தியே தங்களை பிற கணினிகளோடு இணைத்து தகவல் பரிமாற்றத்தைநிகழ்த்த முடிகிறது. இவை தனிச்சீர்மை பெற்றவை அதாவது ஒரு IP Addressஐ,இரண்டு கணினிகள் கொண்டிருக்கமுடியாது ஒரு கணினிக்கு ஒரு முகவரி மட்டுமே இருக்கும்.இணையத்தில் பல பரிமாரிக்கணினிகள் (server) நிறுவப்பட்டுள்ளன அவைகளுக்குஎன்று தனியான நிரந்தர IP Address கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இவைஇருபத்து நான்கு மணி நேரமும் தகவல் பரிமாற்ற வேலையைச்செய்து கொண்டிருக்கும்.இத்தகைய கணினிகளின் IP Address கள் எப்பொழுதும் மாறாதவை. அதுபோலInternet Service Provider (ISP) என்னும், இணைய இணைப்பை பொதுமக்களுக்குவழங்குபவர்களது கணினியும் இவ்வாறே தனக்கொண தனியானதொரு IP Addressஐக் கொண்டிருக்கும்.IP முகவரிகளின் அமைப்பைப்பார்த்தோமெனில் அவை வெறும் எண்களால் ஆனவை ஆனால் அவை நான்கு பிரிவுகளில் மூன்று எண்களைக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு மூன்று எண்களுக்கும் இடையில் ஒரு புள்ளி கொடுக்கப்பட்டிருக்கும்.அதாவது 000.000.000.000 என்ற வடிவத்தில் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்எடுத்துக்காட்டாக அமீரகத்தில் உள்ள பரிமாரிக்கணினியின் IP Addressஆவது194.170.1.6 மற்றும் 194.170.1.7 ஆகும். இவை என்றும் மாறாதவை. இவற்றின்மூலமே இங்குள்ள பொதுமக்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படுகிறது.இவ்வாறே ஒவ்வொரு நாட்டிலும் இணைய இணைப்பு வழங்குபவருடைய பரிமாரிக் கணினியின் மூலம் அந்நாட்டில் உள்ள மக்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படும்.இவ்வாறு நாம் இத்தகைய பரிமாரிக்கணினியில் இணைக்கப்பட்டிருந்தாலும்அந்த இணைப்பு இருபத்து நான்கு மணி நேரமும் அப்படியே இருக்கப்போவது இல்லை நாம் விரும்பிய நேரங்களில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப்பயன்படுத்தி அவ்வப்பொழுது நமது கணினியை இணையத்தில் இணைத்துக்கொள்கிறோம். அவ்வாறு இணைத்துக்கொள்ளும் பொழுது மட்டுமே நமது கணினி இணையத்தில் இணைந்திருக்கிறது. இவ்வாறு இணைந்திருக்கும் பொழுது நமக்கு என்று ஒரு IP Address இருந்தால் தான் நம்மால் பிற கணினிகளுடன் உறவாட முடியும்.எனவே ஒவ்வொரு முறையும் நாம் இணையத்தில் நமது கணினியை இணைத்துக் கொள்ளும்பொழுது நமக்கு இணைப்பைத்தரும் பரிமாரிக்கணினி ஒரு IP Address ஐயும் தருகிறது. இந்த IP Address நிலையானது அல்ல. நாம் இணையத்தொடர்பைத் துண்டித்துக்கொண்டால் அத்துடன் அந்த முகவரியும் பயனிழந்துவிடும்.ஆக ஒவ்வொரு முறையும் நாம் இணையத்தில் இணையும் பொழுது நம்மைஇணைக்கும் பரிமாரிக்கணினிகள் ஒவ்வொரு முறையும் ஒரு IP Address உருவாக்கி நமது கணினிக்குத்தருகின்றன. அந்த முகவரியைப் பயன்படுத்தியே நாம் இணையத்தில் தற்காலிகமாக உலாவருகின்றோம். இவை ஆங்கிலத்தில் Randomly generated IP Address என்று சொல்லப்படுவது உண்டு.இவ்வாறு ஏதாவது ஒரு IP Address ஐ உருவாக்கும் பொழுது அந்த பரிமாரிக்கணினி தன்னுடைய் நிலையான முகவரியை மையமாகவைத்து அதனை உருவாக்குவதுதான் இங்கு சிறப்பம்சம். எடுத்துக்காட்டாக அமீரகத்தில் என்னுடைய கணினியை இணையத்தில் இணைக்கிறேன் என்றால் என்னுடைய கணினிக்கு IP Address ஒதுக்கும்பொழுது அந்த சமயத்தில் அதாவது நான் இணைய இணைப்புக்குள் வரும் சமயத்தில்யாருக்கும் ஒதுக்காத எண்ணாகவும், அதேசமயத்தில் அதனுடைய நிலையான எண்ணின் முதல் பகுதியை மையமாக வைத்தே அது உருவாக்கப்படும்.எடுத்துக்காட்டாக எனது பரிமாரியின் IP Address - 195.229.24.46 என்று கொள்கஎனக்கு ஒதுக்கும் எண்ணானது ஒவ்வொருமுறையும் 195 உடன் துவங்கும் எண்ணாகவே இருக்கும். இதனை வலையமைப்பு எண் என்று கூறுவர் இது சில நாடுகளுக்கு அல்லது ஒரு பெரிய வலையமைப்புக்குச்சொந்தமாக(இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கிற) இருக்கும்.நாம் மடல்கள் எழுதும்பொழுதும், இணையத்தில் உலாவரும்பொழுதும் நமக்கென்று தரப்பட்டிருகிற ஐபி முகவரிகளைக்கொண்டே தொடர்புகொள்ளுகிறோம். அதனால் நாம் அனுப்பும் மடல்கள் இந்த ஐபி முகவரிகளை கொண்டு எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை அறிந்துகொள்ளமுடியும். இதிலும் நான் ஏற்கனவே கூறியதுபோல இத்தகைய முகவரிகள் அவ்வப்பொழுது உருவாக்கப்படுவதும், இணையத்தில் இருந்து வெளியேரும்பொழுது அழிக்கப்பட்டுவிடுவதுமாக இருப்பதால் நாம் எழுதும் மடல்களை வைத்து அவை எங்கிருந்து அதாவது எந்த நாடு, இணையத்தின் எந்த வலையமைப்பில் அதாவது யார் வழங்கிய இணைய இணைப்பில் (VSNL, Sathyam infoway, Emirates Internet) இருந்து எழுதுகிறோம்என்பதை எளிதில் அறிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இன்னார் தான் எழுதினார் என்பதை அறிந்துகொள்ள முடியாது. அவ்வாறு அறிந்துகொள்வதற்கு அந்த பரிமாரியானது எந்த சமயத்தில் யார் யார் எந்த ஐபி முகவரிகளைப் பயன்படுத்தியிருந்தனர் என்பதை சேமித்து வைத்திருக்குமாயின் அதிலிருந்து அறிந்துகொள்ளமுடியும். MAIN SOURCE FROM:- http://ezilnila.com